மே 21 ஆம் தேதி ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு  திருவிழா மே 21ல் மவ்லிது ஷரீப் உடன்  தொடங்குகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில்  உலக பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. . இந்த தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

849 ஆம் ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சி மே 21 ஆம் தேதி தொடங்குகிறது.  தர்கா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு  மவ்லிது ஷரீப் ஓதப்படும். 

இதை தொடர்ந்து மே 31 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு  கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு விழா தொடங்குகிறது.  

முக்கிய நிகழ்வான  சந்தனக்கூடு  விழா ஜூன் 12 ஆம் தேதி மாலை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை மேள, தாளம் முழங்க யானைகள் அணிவிப்புடன், நாட்டிய குதிரைகள் நடனத்துடன்,  ரதம் பவனி அனைத்து  சமுதாயத்தினரின் பங்கேளிப்புடன் தர்காவுக்கு வந்தடையும். இதை தொடர்ந்து  புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும். ஜூன் 19ஆம் தேதி  அஸர் (பிற்பகல்)  தொழுகைக்குப் பின் கொடியிறக்கத்துடன்  விழா நிறைவடைகிறது.  

அன்றிரவு 7 மணிக்கு தப்ரூக் (நெய் சோறு)  வழங்கப்படும். தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி