திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுகவினர் பகுதி வாரியாக ஆலோசனை... பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்பு

 திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் தெற்கு மத்திய , தென்னம்பாளையம் கருவம்பாளையம் ஆகிய பகுதி  கழகங்களுக்கு  உட்பட்ட வார்டு பகுதிகளில் தீவிர   உறுப்பினர் சேர்க்கை பணிகள் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்திலும், நல்லூர் பகுதி ஆலோசனைக் கூட்டம், காட்டுப்பாளையம் வி.பி.என். தோட்டத்திலும் நடைபெற்றது.  

மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் \ பொள்ளாச்சி.வி.ஜெயராமன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

 தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,  மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான  கண்ணப்பன்,  கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.ஜி.மகேஷ்ராம், நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில்,மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர்,மாவட்ட கழக துணைச் செயலாளர்  பூலுவபட்டி பாலு,   மாவட்டம் அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன்,கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  கண்ணபிரான்,மாவட்ட கலை பிரிவு செயலாளர் ரத்னகுமார், கமல் வரதராஜ்,  .விக்னேஷ்வரா சம்பத்,வார்டு செயலாளர்கள் வி.ஜி.வி.பாலு,  கேபட் கோபி,  துளசிமணி, சேமலை,  சக்திவேல்,  நாகராஜ், வார்டு செயலாளர்கள் டேவிட் கோவில் பிள்ளை, அயூப், முகமது பிலால், சக்திவேல், முஜிபுர் ரகுமான், பொன் மருதாசலம், பிரபு குமார், ரவி, ராமசாமி கணேசன் ஜோசி, செல்வராஜ் சிவசுப்பிரமணியம்,  விவேகானந்தன், ரமேஷ், பாலதண்டாயுதம், கந்தவேல்  மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், பங்கேற்றனர்.




Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!