அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

*அதிமுக சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்*

கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போதை பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை காப்பாற்ற தவறிய விடிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் ஓ.கே.சின்னராஜ், ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ராஜ்குமார், கோவனூர் துரைசாமி, ஜெயராமன், அம்பாள் பழனிச்சாமி, சாய் செந்தில் ஜெகதீஷ், வேலுசாமி,நகரக் கழகச் செயலாளர்கள் வான்மதி சேட், ஆறுமுகசாமி,குருதாச்சலம்,  பேரூர் கழக செயலாளர்கள் ரவிகுமார், மாவட்ட கழக பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட கழக துணை செயலாளர் கந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் சண்முகம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என 1000த்திற்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்