சத்தியமங்கலத்தில், ஈகை (பக்ரீத்) திருநாள் சிறப்பு தொழுகை-2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

 நாடு முழுவதும் இன்று,ஈகை திரு நாள் எனப்படும் இஸ்லாமியர் களின் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக,ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மணிக் கூண்டில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கள், கடைவீதி வழியாக, ஊர்வல மாக ஈத்கா மைதானம் சென்றனர்.


கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில், அஹாலே தக்னி சுன்னத் ஜமாஅத் தலைவர் நதிமுல்லாகான் தலை மையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது .அதனை தொடர்ந்து மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அனைவரும் இறை வழிபாடு மேற்க் கொண்டனர்.பின்னர் இஸ்லாமியர் கள், சகோதரத்துவம்,அன்பு,அமைதி நிலவ.ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி , பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.இதில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த  2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதே போல் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, பக்ரீத் பண்டிகையை ஒட்டி,ஏழை, எளிய மக்களுக்கு, குர்பானி அளித்து, சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்