திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள்... 400 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

 திருப்பூர், ராக்கியாபாளையம் அருகில் உள்ள, ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் சாவித்திரி அம்மாள் நினைவாக மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர காவல்துறை, நல்லூர் சரக உதவி ஆணையாளர் நந்தினி மற்றும் 58-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன் தலைமை வகித்தார். 
பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முத்தணம்பாளையம் பாசன தலைவர் மணி, காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார், தொழிலதிபர்கள் சந்தீப்குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், நிரஞ்சன்  ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். 
மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு பசிபிக் யோகா அசோசியேசன் செயலாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டிகளை நடத்தினர். தொழிலதிபர் பிரகாஷ், வாஸ்து நிபுணர் மோகன கிருஷ்ணா மற்றும் வர்ம சிகிச்சை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தொடர்புக்கு : அழகேசன் - +91 97861 25453

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்