சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது.


 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக, சத்திய மங்கலம் உதவி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரனுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், சத்தி போலீசார், சத்தியமங்கலம் அத் தாணிசாலை,வடக்குப்பேட்டை சந்தை கடை கார்னர் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சத்தி திப்பு சுல்தான் சாலையில் இருந்து மொபட் வாக னத்தில் வந்த இருவர், போலீசாரை கண்டதும், வாகனத்தை திருப்பிக் கொண்டு, தப்பி ஓடி முயன்றனர். இதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் துரத்தி பிடித்து, விசாரணை மேற்கொண்டு, அவர் கள் வைத்திருந்த பையை சோத னையிட்ட போது, அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும், கஞ்சாவை விற்பனை செய்ய, கொ ண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், சத்திய மங்கலம் வடக்குப்பேட்டை, தண்டு மாரியம்மன் கோவில் வீதி யைச் சேர்ந்த பிரகாஷ் (27), மற்றும் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனி யை சேர்ந்த புவனேஸ்வரன் (39) என்பதும் தெரியவந்தது. இதை யடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மொபட் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூபாய் 1200 / - கைப்பற்றி, இருவர் மீதும் வழக்கு பதிந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்த னர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்