சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகாதார கட்டிடம் வேண்டி மனு

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரகு (எ) துரைராஜ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அதில் " நான் சார்ந்துள்ள  பட்டணம் ஊராட்சியில் தற்போது பயன்பாட்டிலுள்ள சுகாதார கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் மேலும் சிதிலமடைந்துள்ளது  தற்பொழுது இவ்வூரில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் வசிக்கின்றனர் எனவே புதிய சுகாதார மையம் ஒன்றை பட்டணம் ஊராட்சியில்  கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட  அமைச்சர் மா. சுப்பிரமணியம்  சுகாதார கட்டிடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாக தெரிவித்தார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்