கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் கிராம குடிநீர் சுகாதார குழுவிற்கு களநீர் பரிசோதனை பயிற்சி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில் , ஜல் ஜீவன் மிஷன் 2023-24 திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியின்‌ முன்னதாக கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள 39 ஊராட்சிகளிலூம்,  ஒவ்வொரு ஊராட்சிக்கு பாணிசமதி, ஆஷா பணியாளர், மகளீர் சுய உதவி குழு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் என 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு என்ற பெயரிட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கண்ட இந்த குழுவில் உள்ள மொத்தம் 195 பேருக்கு 26 ஆம் தேதியான நேற்று தொடங்கி, வருகின்ற 30 ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நாள் ஒன்றுக்கு பத்து ஊராட்சிகள் என தேர்வு செய்து  பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சியின் தொடக்க நாளான நேற்று முதல் பத்து ஊராட்சிகளை சேர்ந்த  கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களை அழைத்து பயிற்சி முகாம் நடத்தபட்டது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்யானந்தம் தலைமை தாங்கினார். உதவி நிர்வாக பொறியாளர் குமரவேல், துணை பிடிஓ ( மேலாளர்) ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் ஜெயபிரியா வரவேற்றார். பிடிஓ மணோகரன் கலந்து கொண்டு களநீர் பரிசோதனை பெட்டி, அதன் கையேடு அடங்கிய பெட்டகத்தை பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கினார். மேலும்  வேதியலாளர் வரலட்சுமி,  உள்ளிட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.  இதில் குடிநீர் பரிசோதனையினை  கொடுக்கபட்டுள்ள களநீர் பரிசோதனை பெட்டி மூலம்

எவ்வாறு பரிசோதனை செய்வது என்று விளக்கப்பட்டது. முதலாவதாக பயிற்சிஎடுத்துகொள்பவர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து கொண்டுவந்துள்ள நீரை பி.எச் பேப்பர் மூலம் தண்ணீரின் தன்மையை கண்டறிவது, பின் அளவு ஜாடியில் 20 மில்லி எடுத்து கொண்டு அதில் 5 சொட்டு பரிசோதனை கெமிக்கல்ஸ் மூலம் ஊற்றி சோதனை செய்து,  காத தன்மை, அமில தன்மை, நடுநிலை தன்மை, என நீரின் தன்மையை கண்டறிய வேண்டும். இவ்வாறு  பயிற்சி முகாமில் பயிற்சி கொடுக்கப்பட்டது.  நிகழ்வின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் பிரதாப் நன்றி கூறினார். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!