தமிழக அரசின் வருமுன் காப்போம் மாபெரும் இலவச பன்நோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அந்தியூர் எம்எல்ஏ.

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அம்மாபேட்டை வடக்கு  ஒன்றியம்  வெள்ளித்திருப்பூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்



ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற,கலைஞரின் வரும்முன் காப்போம்  மாபெரும் இலவச  பன்னோக்கு   மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற. உறுப்பினர் வெங்கடாசலம் இம்முகாமில், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம்,இ.சி.ஜி., கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், எலும்பு முறிவு மருத்துவம், இரத்தப் பரிசோதனை, பொது மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த மருத்துவர்களிடம்  பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு இலவச சத்துப் பெட்டகங்கள்,  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்  தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு மருந்துப் பெட்டகங்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்  வழங்கினார்.


 உடன் வட்டார மருத்துவ அலுவலர்  அருள்மணி, ஒன்றிய கழக செயலாளர்   சரவணன்,மருத்துவர்கள் மாதேஷ் குமார்,அன்புமணி, செந்தில், சங்கரலிங்கம்,ஒன்றிய கழக அவைத் தலைவர்  சுப்பிரமணியம்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்  சம்பத்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகேசன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணுப்பையன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்