சத்தியமங்கலத்தில் அதி நவீன திரையரங்கு -முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நேரு நகரில், ஜெய்சக்தி திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கம்,அதி நவீன வசதியுடன் கூடிய, மூன்றுதிரை யர ங்குகளாக, மாற்றி வடிவமைக்கப் பட்டு, 300 இருக்கையுடன் கூடிய ஒரு திரையரங்கமும், 150 இருக்கை உடன் இரண்டு திரையரங்கமும் அமைக்கப் பட்டுள்ளது.மேலும் இதில், அதி நவின அமெரிக்க தொழில் நுட்பத்துடன் கூடி ய, ஒலி, ஒளி வசதி அமைக்கப்பட்டு, வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சொகுசான இருக்கை களும் அமைக்கப்பட்டுள்ளன.


இத்திரையரங்கினை, அதிமுக அமை ப்புச்செயலாளரும்,கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ. செங்கோட்டையன் எம். எல்..ஏ. ரிப்பன் வெட்டி, திரையரங்கினை திறந்து வைத்தும்,குத்து விளக்கு ஏற்றி, காட்சி அமைப்பை துவக்கி  வைத்தும், பொன்னியின் செல்வன்- 2 படத்தை பார்வையிட்டார். அகன்ற திரையில், ரம்மியமான, அசத்தும் ஒலி அமைப்பு பார்வையாளர்களை திணறடித்தது. சத்தியமங்கலத்தில் ஒரே இடத்தில், 3 திரையரங்குகள் கொண்ட முதல் திரையரங்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி, எம். எல்.ஏ. முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்,எல்.பி.தர்மலிங்கம் சிறப்பு விருந்தினர் ஏ.கே. பெரு மாள்சாமி மற்றும் திரைப்பட விநி யோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப் பாளர்கள், திரையரங்கு உரிமையாள ர்கள், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற, பேரூராட்சி, நகர் மன்ற, இந்நாள், முன்னாள் தலைவர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இவ்விழா வில்,கலந்துகொண்டு, சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திரை யரங்கு உரிமையாளர் கந்தசாமி மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பிரசன்னா ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்