கிளாம்பாடி பேரூராட்சியில் இலவச பொது மருத்துவம், எலும்பு மூட்டு தேய்மானம்,மற்றும் கண் பரிசோதனை முகாம்

 ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம்  கிளாம்பாடி கருமாண்டம் பாளையத்தில் கிளாம்பாடி பேரூராட்சி  மற்றும் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி& மருத்துவமனை, இணைந்து நடத்தும்  இலவச பொது மருத்துவம்,எலும்பு மூட்டு தேய்மானம், மற்றும்  கண் பரிசோதனை முகாம், கருமாண்டபாளையம் கொங்கு மஹாலில்  நடைபெற்றது.




 மருத்துவ முகாமில் பொது மருத்துவம் ரத்தக்கொதிப்பு சக்கரை நோய் இருதய நோய்கள், அறுவை சிகிச்சை சம்பந்தமாக காது மூக்கு தொண்டை, சிறுநீரக கல் அறுவை சிகிச்சை, பித்தப்பை கல், உடல் அடைப்பு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து அவசரம் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகளும்பரிசோதனை செய்யப்பட்டது.



 மேலும் எலும்பு முறிவு சிகிச்சை சம்பந்தமாகவும் , கண் சிகிச்சை சம்பந்தமாகவும்  பரிசோதனை செய்யப்பட்டது.



 இம்முகாமில்   பிரபுதேவா, சௌந்தரகரி, யுவஸ்ரீ, ப்ரீத்தி பிரியங்கா  டாக்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.



 இந்த சிறப்பு முகாமை திமுக கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் எம் சின்னச்சாமி தலைமையில் கிளம்பாடி பேரூராட்சித் தலைவர் திருமதி அமுதாள், துணைத் தலைவர் எஸ் சொக்கலிங்கம், கிளம்பாடி பேரூர் கழகச் செயலாளர் P. விஸ்வநாதன், கிளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் எஸ் திருப்பதி ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். மேலும் சிறப்பு முகாமில்  200க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்