கோவை சூலூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி
சூலூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில்16வது வார்டு பழனியப்பா நகர் முதல் தனலட்சுமி நகர் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகர் ஒன்பதாவது வார்டில்வாடி சாலை மேம்பாடு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சிகளின் இயக்குனர் துவாரகநாத்சிங் , செயற்பொறியாளர் லலிதாமணி, பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், சில சூலூர் நகர திமுக செயலாளர் கௌதமன், பேரூராட்சி தலைமை அலுவலர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர்கள் பசுமை நிழல் விஜயகுமார், வீராசாமி, பாலாஜி,தங்கமணி, விஜயலட்சுமி, கவிதா,லலிதா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்