சூலூர் முன்னாள் எம்எல்ஏ பொன்முடி பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் இலவச மருத்துவ முகாம்

திராவிட முன்னேற்றக் கழக கோயமுத்தூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் சூலூர் நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூலூர் பேரூராட்சியின் தலைவர் எஸ். எஸ். பொன்முடி அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு சூலூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
முகாமினை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் மணி சுந்தர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் துவக்கிவைத்தனர், இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால், துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சூலூர் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி உதய பூபதி, கண்ணம்பாளையம், இருகூர், பள்ளபாளையம், செயலாளர்கள் மற்றும் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி நிர்வாகிகள்மற்றும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர் இதில்
கண் சிகிச்சையில்300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 31 அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் 
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ரத்ததான முகாமில் பரிசோதனை செய்யப்பட்ட 69 பேர் ரத்ததானம் வழங்கினார்கள்.
மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை முகாமில் 170 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பல் சிகிச்சை முகாமில் சொத்தை பல் அடைத்தல் பல் எடுத்தல் பல் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளில் 195 பேர் பயன்பெற்றனர்.குழந்தைகள் நல சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் apex நிறுவனத்தின் மூலமாக 200க்கும் மேற்பட்டோருக்கு zincovit syrup,zincover liquid, zincovit active உள்ளிட்ட சத்து மருந்துகள் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு 
கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி 
பேரூராட்சி மன்ற உறுப்பினர் பசுமை நிழல் E r சூ.ஆ. விஜயகுமார் ,
சமூக ஆர்வலர் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சூ.வே.தர்மராஜ்
நகரசெயலாளர் உரம் சு. கவுதமன்,
அரிமா ப. சிவகுமார். ஆகியோ நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!