நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காவல்துறை கஞ்சா வேட்டை ஒருவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கஞ்சா வேட்டை அதிரடி காவல்துறை நீலகிரி  கூடலூர் பகுதியானது கேரளா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும் இதனை பயன்படுத்தி இச்சாலை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தும் தொடர்ந்து போதைப் பொருட்களை கடத்துவதை தடுத்தும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர் இந்நிலையில் கூடலூர் பந்தலூர் தாலுகா மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்துவது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் அம்பலமுலா சிறப்பு உதவி ஆய்வாளர் சாஜி, காவலர் பழனிச்சாமி, வினிது ஆகியோர்   நாடுகாணி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது மைசூர் பகுதி பத்திராவதி இருந்து கேரளாவுக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர் அப்பொழுது லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து கஞ்சா மற்றும் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர். பறிமுதல் செய்தனர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த திருவல்லா பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் சைனீஸ் (37) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்