புதுச்சேரி RLV ஜனநாயக பேரவை நிறுவனர் R. L வெங்கட்டராமன் அறிக்கை

வரலாற்று சிறப்பு மிக்க பெரிய மார்க்கெட் குபேர்  அங்காடி வியாபாரிகளை அழைத்து பேசி அவர்களின் ஒப்புதலோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று புதுச்சேரி RLV ஜனநாயக பேரவை  நிறுவனர் R.L வெங்கட்டராமன் அறிக்கை
வரலாற்று சிறப்பு மிக்க பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி தற்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கையில் மாட்டிகொண்டு அவஸ்த்தை படுகிறது. அங்குள்ள வியாபாரிகள் தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று அவர்கள் அல்லோலபடுவதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கு தள்ள பட்டிருக்கிறார்கள்.  மாநில வளர்ச்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தேவைதான். ஆனால் அது எந்த ஒரு வியாபாரியின் ஸ்திரத்தன்மையையும் பாதித்து விட கூடாது. அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கானது என்றால் அதை செயல் படுத்தும்போது , மக்களையோ வியாபாரிகளையோ அச்சுறுத்துவது போல் இருக்கக்கூடாது என்பதை அரசு உணரவேண்டும். மக்களுக்கான முதல்வர்  மருத்துவகல்லூரிக்கு மட்டுமல்ல மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சேர்த்துத்தான் என்பதை முதல்வர் ரங்கசாமி அவர்கள் மறந்து விடக்கூடாது. மருத்துவ கல்லூரி விசயத்தில் போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றியது போல்,  பெரிய மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் பாதிக்காத அளவிற்கு போர்க்கால நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்ற முன் வர  வேண்டும் . இந்த விசயத்தில் முதல்வர் அவர்கள் தலையிட்டு பெரிய மார்கட்  வியாபாரிகளை அழைத்து பேசி அவர்களின் விருப்பத்தையும் கேட்டு ,   வியாபாரிகளின் ஒத்துழைப்போடுகூறியுள்ளார் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை    நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்  என்று புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!