கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு தினம்

கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  போதை ஒழிப்பு தினம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம் கமலா  தலைமையில் கொண்டாடப்பட்டது
போதைப் பொருட்கள் குறித்தும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவியர்க்கு தெளிவாக எடுத்துரைத்தார் மாணவியர்கள் அனைவரும் நாங்கள் போதைப் பழக்கம் உள்ளவர்களைக் கண்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம் என்ற வாக்குறுதியை  அளித்தார்கள் இன்று முதல் தங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் போதைப் பொருளின் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்கள் அதன் பிறகு பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டார்கள் இவ்வாறு போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்