திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான சதுரங்கப்போட்டிகள்

 திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்துகின்றது.

தெற்கு குறுமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான மாணவ மாணவியர்கள் 11, 14, 17 - 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அனிதா ஜோசப் போட்டிகளை துவக்கி வைத்தார். பிடே ஆர்பிட்டர் கோபி கிருஷ்ணன் மாணாக்கர்களுக்கு விதிமுறைகளை விளக்கிக் கூறினார். குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், லதாமாதேஸ்வரி, சண்முகநதி ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றது.

மாணவர்கள் பிரிவுப் போட்டிகள் 

11 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 19 பேர் பங்கேற்றனர். 4 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வேலவன் பள்ளி முதலிடம், எம்.என்.சி.சி பள்ளி இரண்டாமிடம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 82 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் செயிண்ட் ஜோசப் பள்ளி முதலிடம், இடுவம்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடம், விகாஸ் வித்யாலயா பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 56 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இடுவம்பாளையம் அரசுப்பள்ளி முதலிடம், விஜயாபுரம் அரசுப்பள்ளி இரண்டாமிடம், பிரைட் பப்ளிக் பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 24 பேர் பங்கேற்றனர். 4 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி முதலிடம், லிட்டில் ஃபிளவர் பள்ளி இரண்டாமிடம், கே.எஸ்.சி பள்ளி மூன்றாமிடம் பெற்றது.


மாணவியர்கள் பிரிவுப் போட்டிகள் 

11 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 22 பேர் பங்கேற்றனர். 5 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் செயிண்ட் ஜோசப் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், திருக்குமரன் நகர், ஊ.ஒ.து.பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 60 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி முதலிடம், இடுவம்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடம், விகாஸ் வித்யாலயா பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 42 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் எம்.என்.சி.சி பள்ளி முதலிடம், மணி பப்ளிக் பள்ளி இரண்டாமிடம், வீரபாண்டி அரசுப்பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 17 பேர் பங்கேற்றனர். 4 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் லிட்டில் ஃபிளவர் பள்ளி முதலிடம், பெருந்தொழுவு, அரசுப்பள்ளி இரண்டாமிடம், எம்.என்.எம்.சி பள்ளி மூன்றாமிடம் பெற்றது.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு குறுமைய இணைச் செயலாளர்கள் ஷ்யாம் சகாயராஜ், மோகன்ராஜ், கவிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

போட்டிகளின் நடுவர்களாக ராமகிருஷ்ணன், தமிழ்வாணி, லட்சுமணன், கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், மெளலிதரன், காளீஸ்வரி, ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்