பெரியூர் அரசு நடுநிலை பள்ளி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

 இந்திய சுதந்திர தினம் 77 - ம்  ஆண்டை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பெரியூர் அரசு நடுநிலைப் பள்ளியில்  சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. 



கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் திரு ஞானவேல்  கொடியேற்றி வைத்து  தலைமை தாங்கினார்.  



தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்புரை நல்கினார். 


இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  அடிப்படை மக்கள் உரிமைகள் குரல்  டாக்டர் P. பாலசுப்பிரமணியம், மெஜஸ்டிக் நிறுவனர்கள், மற்றும் மலையம்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



 இவ்விழாவில்  மெஜஸ்டிக் நிறுவனம்  மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.




 மேலும் இந்நிகழ்ச்சியில் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


 நன்றியுரை ஆசிரியர் குமார் நல்கினார்.


              தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி