அரசின் காலை உணவுத் திட்டம் துவக்க விழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ:

 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி  மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  கலந்து கொண்டு விழாப் பேருரை நிகழ்த்தி பள்ளியில் பயிலும் 281 மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளுடன் கூடிய காலை உணவினை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.





நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் "ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 178 பள்ளிகளில் பயிலும் 6437 மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சத்துள்ள ஊட்டச்சத்து உணவுகள் காலையில் கிடைக்கப் பெறுகின்றது. இதன் மூலம் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நல்ல உடல் நிலையில் நன்கு கல்வி கற்க முடியும்" என கூறினார்.







நிகழ்வில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி,பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரையாற்றிட உள்ளூர் கட்சி பிரமுகர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.



TAMIL ANJAL REPORTER BOOBALAN

9443655196

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்