ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் வெற்றி

 ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.

 தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் சென்னை சான் அகாடமியில் 17.10.2023 முதல் 22.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்த 4000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் D.G.பிரணவ் 300மீ Quads மற்றும் 1000மீ Quads பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவரையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திரு.நந்தகுமார் அவர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் திரு. சக்தி நந்தன், துணைச்செயலாளர் திருமதி. வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் திருமதி. லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்