திருப்பூரில் 'குரூப் ஸ்டடி'யால் கர்ப்பமான மாணவி... சக மாணவன் கைது
திருப்பூர் அருகே குரூப் ஸ்டடி என கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவனும் அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியும் திருப்பூரில் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர்.
இந்த பழக்கத்தின் காரணமாக மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரூப் ஸ்டடி எனக்கூறி தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
வீட்டில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது குரூப் ஸ்டடி காரணமாக மாணவி கர்ப்பமான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மாணவியுடன் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையம் சென்ற பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டார். பின்னர் மாணவி அளித்த புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறார் சிறையில் அடைத்தனர்.