சென்னை பட்ரோட்டில் ரூ.500 கோடி நிலம் மீட்பு

 பட்ரோட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பு. பல்லாவரம் தாசில்தார் நடவடிக்கை.

சென்னை கிண்டி அடுத்த பட்ரோட்டில் 500 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர், இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில் இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தெரியவந்ததன் பேரில் செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் இன்று இடிக்கும் பணி துவங்கியது.

வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது. 

இதே போல் இதற்கு அருகில் எஸ்.பி.ஐ.வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த இடத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் அந்த இடம் மீட்கப்படும் என்வும் அதன் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்