தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

 

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமானது மாநிலச் செயலாளர் பி.வீரமணி தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது மாநில செய்தி தொடர்பாளர் எம்.கலைவாணன் மேற்கு மண்டல செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் 

சங்கத்தின் நாட்காட்டி வெளியிட்டு சிறப்புரையாற்றினர் மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி மாவட்ட செயலாளர் என்.செல்வராஜ் மாவட்ட பொருளாளர் பி.செல்வகணேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.இராச அம்சன், சி.தட்சிணாமூர்த்தி மற்றும் ஏனைய நிர்வாகிகள் ரகுநாதன், சுரேஷ், சாந்து பாட்ஷா, வெள்ளிங்கிரி, கல்பனா, விமலா, தினேஷ்குமார், அசோக்குமார், செந்தில் குமார், கோமதி, கலைவாணி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில்   சென்ற கல்வி ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் மாணவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்த கணினி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது மேலும் 

அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வழங்கி வரும் 7.5% இட ஒதுக்கீட்டினை 10% இட ஒதுக்கீடாக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும், புதிய கணினி ஆய்வகம், புதிய பணியிடங்கள் உருவாக்குதல் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்