கோபி மொடச்சூர் அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா

 




ஈரோடு மாவட்டம்,கோபி வட்டம் மொடச்சூர்அருள்மிகு பழமைவாய்ந்த தான்தோன்றி அம்மன் திருக்கோயில் குண்டம் தேர் திருவிழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் ஈ.ரா.சிவக்குமார், கோபி நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா, செயல் அலுவலர் நா. ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய் கருப்புசாமி, மகேஸ்வரி,ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து சனிக்கிழமை இரவு மலர் பல்லக்கு, ஞாயிறு காலை தெப்பத்தேர் உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், வரும் ஜனவரி 1-ந்தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மறுபூஜையும், 5 ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பரம்பரை அறங்காவல்கள், ஊர் பொதுமக்கள் மற்றும இறையன்பர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்