கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை என 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை,முதுகலை என  1494 மாணவ மாணவிகள்  பட்டம் பெற்றனர்..


கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு  மையத்தின் இயக்குனர்  டாக்டர் பீரீத்தி பானர்ஜி கலந்து கொண்டு 1494 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.இதில் மாணவ,மாணவிகளிடையே  பேசிய அவர்,மாணவ,மாணவிகள் தங்களது எதிர்கால கனவுகளை மிக பெரிதாக காண வேண்டும் என்றும், ,எதிர்கால இந்தியா வல்லரசாக மாற இளம் தலைமுறை மாணவர்களின் பங்கு மிக அவசியம் என தெரிவித்தார்..கல்வி மற்றும் திறன் ஆற்றலோடு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்..குறிப்பாக நாம் நம்மை குறைத்து மதிப்பிட கூடாது எனவும்,உயர்ந்த நிலை எண்ணங்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என கூறினார்..விழாவில் 1199 இளங்கலை மாணவ மாணவிகள். 252 முதுகலை மாணவ மாணவிகள், 43 முதுகலை  டிப்ளமோ மாணவ மாணவிகள் உள்பட 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்..நிகழ்ச்சியில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.லட்சுமணசாமி துறை பேராசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் என   பலர் கலந்து கொண்டனர்…

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்