சூலூர் காவல்துறையினர் அதிரடி 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மீட்பு ஒருவர் கைது

சூலூர் காவல் துறையினர் கோவை அவினாசி ரோடு நீலாம்பூர் மேம்பாலத்திற்கு கீழே கஞ்சா சம்பந்தமான குற்றங்களை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 
சந்தேகத்திற்குரிய (TN 63 AD 4308 Tata Ace) வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது அந்த வாகனத்தில் டிரைவர் சீட்டுக்கு அருகே வெள்ளை நிற பையில் சட்டத்திற்கு புறம்பாக 5 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து விசாரனை செய்த போது  அவர் பெயர் நாகராஜ் (45) மதுரையை சேர்ந்தவர் தற்போது இருகூரில் வசித்து வருகிறார் இவர் மீது ஏற்கனவே சூலூர் காவல் நிலைய குற்ற எண்- 845/2023 u/s. 8(c),20(b)(ii)(C),25,26 NDPS Act என்ற வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர் என தெரிய வந்ததது மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர் இதன் மதிப்பு 50 ஆயிரம் ஆகும் ஒட்டி வந்த வாகனத்தையும் கைப்பற்றி  காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்