மத்திய, மாநில அரசுகள்பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பிப்.5ல், திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம்.. விவசாய சங்கங்கள் மற்றும் பிற்படுத்தபட்டோர் சமூக அமைப்புகள் திட்டவட்டம்.


 பிப்ரவரி 5ஆம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு,மாநில அள வில், பி சி ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்த, தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற்படு த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட் டோர் சமூகத்தினர் கூட்டமைப்பு அறி விப்பு. 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த,  கரு  தொட்டம்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணப்பகவுடர் என் பவரின் விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்கள் மீது, நடவடிக்கை எடு க்க கோரி புகார் அளித்த கிருஷ்ணப் ப கவுடர் மீது பிசிஆர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.இதனை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற் றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் சமூகத்தினர் சார்பில் பிப்ரவரி 5ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த சத்தியமங்கலம் காவல்துறை யிடம் அனுமதி கோரி மனு அளித்த னர்.அதனை தொடர்ந்து இன்று சத் தியமங்கலம்  துணை காவல் கண் காணிப்பாளர் எம்.எஸ்.சரவணன் தலைமையில், அமைதி பேச்சு வார்த் தை நடைபெற்றது.

இதில்,தமிழகவிவசாயிகள்பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தினர் காவல்  துணை கண்காணிப் பாளரிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.அப்போது காவல்  துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணப்ப கவு டர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து நியாயமாக விசாரணை நடை பெற்று வருகிறது விசாரணை முடியும் வரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.


இதற்கு விவசாய சங்கத்தினர் நியாய மான கோரிக்கையை முன்வைத்து, நாங்கள் போராட்டம் நடத்தஉள்ளோம். பி.சி.ஆர் சட்டத்தை சிலர் பணம் பறிக் கவும்,நிலத்தை அபகரிக்கும் நோக்கத் தில் பயன்படுத்துகின்றனர்.பிசிஆர் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம், 93% பொய்யான வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு உள்ளன என கூறியுள்ளது.என வே,இச்சட்டத்தை மத்திய மாநில அரசு கள் ரத்துசெய்யவேண்டும் என கோரி க்கையை முன்வைத்து இந்தபோராட்ட ம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்த போராட்டம், மாநில அளவில் ஒரு லட் சம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த ப்பட உள்ளது என தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!