குடியரசு தினத்தை முன்னிட்டு சிறந்த சேவைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கையால் விருது

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களில் சிறந்த சேவை செய்ததற்காக ஜோட்டிகுரியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது பணி மற்றும் சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை பிரிவில் கோட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜோட்டிகுரியன் அவர் 1996 இல் நெடுஞ்சாலைத் துறையில் சேர்ந்தார் தர்மபுரி கோபிசெட்டிபாளையம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். குருவாயூர் அருகேயுள்ள திருச்சூர் சிட்டாட்டுக்கரையைச் சேர்ந்தவர்  இப்போது சூலூர் காங்கயம்பாளையதில் குடியிருந்து வருகிறார் இவரது மனைவி ஜீனா இந்திய விமானப்படையில், சூலூரில் சிவில் கெஜட்டட் அதிகாரியாக பணிபுரிகிறார் இவருக்கு இரண்டு குழந்தைகள் ஜெரோம் மற்றும் ஜாயல் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்