தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவும் 2 நாட்கள் தடை

தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவும் 2 நாட்கள் தடை!

தூத்துக்குடிக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இரண்டு நாட்களுக்கு  வாகனங்கள் செல்ல தடை விதித்து வஉசி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளதுடன் . மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய தினங்களில் துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்திட துாத்துக்குடி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன்பிக்கச்செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீனவர்கள் கடலுக்கு யாரும் கடலுக்கு எனவே. மேற்குறிப்பிடப்பட்டுள்ள மீன்பிடிக்க செல்லக்கூடாது என்பதனை தங்களது சங்கத்தை சார்ந்த அனைத்து மீனவர்களும் அறிந்திடும் வண்ணம் அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 27.02.2024 அன்று மதியம் 2:00 மணி முதல்  28.02.2024 மதியம் 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல லாரிகள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று வஉசி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக துறைமுகம், டிரக் பார்க்கிங் டெர்மினல் முதல் நுழைவு வாயில் வரை வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது. எனவே, அதற்கேற்ப லாரி இயக்கங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் - அஹமத் ஜான்

புகைப்படம் - சித்திக்

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!