தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல்


 தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு  1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து நூற்று தொன்னுற்று ஒன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.

மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள் இரயில் நிலையங்கள், மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் உள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.  
எனவே அனைத்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு; தீவிரபோலியோ சொட்டு மருந்து முகாம் நாள் 03.03.2024 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லெட்சுமிபதி கேட்டுக்கொள்கிறார்.

செய்தியாளர்- அஹமத்
புகைப்படம் - சித்திக்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!