கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது



கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கலந்து கொள்ளக்கூடிய அனைத்து இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது
10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டிலை கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தேர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள்
இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோவையில் வாழக்கூடிய அனைத்து இந்து முஸ்லிம்  சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற சாட்சியோடு இந்த நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில் தலைவர் அமானுல்லா, முத்துவல்லி ஜாபர் அலி , பொருளாளர் பக்கீர் முகமது, செயற்குழு உறுப்பினர்கள் ஆஷிக் அஹமது, முகமது இப்ராஹிம், ஷாஜகான், இதயத்துல்லா, நிஜாமுதீன், நவ்ஷாத் அலி, மற்றும் மகா சபை உறுப்பினர்கள் அசாருதீன், சாதிக், முஸ்தபா, என அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வில் வந்திருந்த பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கினார்கள்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்