கோவையில் குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் புதிய கிளையை துவக்கியது

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில்  குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் கிடைக்கும் வகையில் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் (First Cry.com) தனது புதிய கிளையை துவக்கியது…
பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பிரத்யேக மெலிதான ஆடைகள்,விதவிதமான தொட்டில்கள்,குழந்தைகளுக்கான பிரத்யேக மெத்தைகள் என பிறந்த குழந்தைகள் முதல் சுமார் ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில்  (First Cry.Com) ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது..தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்நிறுவனத்தின் கிளைகள் கோவையில் காந்திபுரம்,ஆர்.எஸ்.புரம்,அவினாசி சாலை என நகரின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் பிரம்மாண்டமாக தனது கிளையை துவங்கியுள்ளது.. புதிய ஷோரூம் துவக்க விழா அதன் பங்குதாரர்கள் ஷபீக் அகமது,சஷார் அகமத்,மற்றும் முகம்மது ஜுனூன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் புதிய கிளையை துவக்கி வைத்தார்.. முழுவதும் குளிரூட்டப்பட்ட புதிய ஷோரூமில்,
இங்கு குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான பொருட்களும் ஒரே இடத்தில் உள்ளன குறிப்பாக . குழந்தைகளுக்கு அவசியமான நாப்கின், மெல்லிய  துண்டுகள், ஈரமான துடைப்பான்கள், போர்வைகள், ,தொட்டில்கள், கிடைக்கின்றன.
மேலும், வித விதமாக குழந்தைகளின் கண்ணைக் கவரும் துணி வகைகள், ஃபீடிங் பாட்டில், ஸ்பூன், சிப்பர், மில்க் கண்டெய்னர், குழந்தைகள் குளிப்பதற்கு தேவையான ஆயில் மசாஜ் ஷீட், ஹேர் ஆயில், சோப், ஷாம்பூ போன்றவைகள் விற்கப்படுகின்றன. தாய்மார்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், Mother needs பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரே இடத்தில், அம்மா, குழந்தை என இருவருக்குமேயான அனைத்து பொருட்களும் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்  வகையில் இந்த கிளையை துவக்கி உள்ளதாக  உரிமையாளர்கள் தெரிவித்தனர்..

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!