மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாணவி தேர்வு

 மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவி.


தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக  கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் ( 27.02.2024 முதல் 29.02.2024 வரை ) மாநில அளவிலான பெண்களின் மேம்பாட்டுக்கான பயிலரங்கம் நடைபெறுகிறது. இப்பயிலரங்கத்தை துவக்கி வைப்பதற்காக அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா கலந்து கொள்ள இருக்கிறார்கள், மாநில நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்தில் இருந்து 120 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மொத்தம் எட்டு பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி ஜெயலட்சுமி ( விலங்கியல் துறை ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே அரசு கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிலரங்கத்தில், பொருளாதார சுதந்திரம், பெண் குழந்தைக்கு கல்வி, தலைமைத்துவம்,

சமுதாய அதிகாரம், கல்வி மூலம் மகளீர்களுக்கு அதிகாரம் அளித்தல், போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இம்மாணவியை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இன்று 27.02.2024 அதிகாலை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்