சங்கரா கல்லூரி மாணவர் 39 நிமிடங்கள் 41 வினாடிகளில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை

கோவை சங்கரா கல்லூரி மாணவர் சாதனை  39 நிமிடங்கள் 41 வினாடிகளில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை.

கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேலாண்மை இறுதியாண்டு படிக்கும் மாணவர் ரூபன்ராஜ், 39 நிமிடங்கள் 41 நொடி நேரத்தில் 140 தேங்காய் சார்ந்த உணவுகள் தயாரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தார்.
கல்லூரியின் அதிநவீன சமையல் ஸ்டுடியோவில் இந்த நிகழ்வு நடை பெற்றது, அங்கு ரூபன்ராஜுக்கு முழு வசதியுடன் கூடிய சமையலறை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. காலை 10:45 மணி முதல் உணவுகளைத் தயாரிக்க தொடங்கி மாணவர், காலை 11:24 மணிக்கு தேங்காயைப் பயன்படுத்தி இனிப்புகள், சாலடுகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், வேகவைத்த உணவுகள், அரிசி வகைகள், குழம்பு உணவுகள் சட்னி, தோசை, முதலிய மொத்தம் 140 வகையான உணவுகளை 39 நிமிடங்கள் 41 வினாடி நேரத்தில் தயார் செய்து சாதனை படைத்தார்.
இந்நிகழ்வின் போது கல்லூரியின் முதல்வர் வி.ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், கேட்டரிங் துறையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்து உற்சாக படுத்தினர். சங்கரா நிறுவன வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்