தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை


 தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினம் : அமைச்சர், மேயர், மரியாதை

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்து 94 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பெருமாள் கோவில் அறங்காலர்கள் குழு தலைவர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்