ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் அருள்மிகு ஸ்ரீ சோழ தேச மாரியம்மன் திருக்கோயில் கம்பம் விழா.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்,கொமார
பாளையம் ஊராட்சி, கொமார பாளையத்தில், எழுந்தருளியுள்ள,ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் தங்கை, ஸ்ரீ சோழ தேச மாரியம்மன் கோயில் கம்பம் விழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, தினமும் இரவில் கம்பம் சுற்றி அம்மன் புகழ்பாடும் களியாட்டம் ஆடிவந்தனர்.திருவிழா வின் முக்கிய நிகழ்வாக, 27 ஆம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து,அம்மனுக்கு தீர்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான,பக்தர்கள் கலந்து கொண் டு, அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின்னர் இரவு கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது.



காலை6 மணியளவில் அம்மன் அழைத்தல் நிக ழ்ச்சியும், காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. பின்னர் அம்மனுக்கு கடா வெட்டி, பொங்கலிட்டு,சிறப்பு அலங்கார பூஜை கள் நடைபெறவுள்ளன.மாலை 4 மணிக்கு கம் பம் ஆடுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கம் பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நடைபெறவுள்ளன .29ம் தேதி மஞ்சள் நீராடு தலும், ஏப்ரல் 1ம்தேதி அம்மனுக்கு மறு பூஜையும் நடைபெற உள்ளன. .ஸ்ரீ சோழா தேச மாரியம்மன் கோவில் திரு விழாவையொட்டி, கொமார பாளையம் கிராமம், விழாக்கோலம் பூண்டு உள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்