டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்த அமலாக்கத் துறையை கண்டித்தும், ஜனநாயக படுகொலை செய்த பாஜகவை கண்டித்தும் கோவை மண்டலம் சார்பாக கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பாக கோவை மண்டல வி.சி.க தலைவர் சுசி கலையரசன், தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் .கோவை குமார், திராவிடர் கழக தலைவர் .ராமகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வு இயக்க தலைவர் வழக்கறிஞர் J.D.சாக்ரடீஸ், கிறிஸ்துவ ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் .ஸ்டீபன் ராஜ் மற்றும் .டிசில்வா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ஆம் ஆத்மி கட்சி கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி, பொள்ளாச்சி சட்டமன்ற பொறுப்பாளர் ஸ்ரீமனோஜ் குமார், கோவை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் மந்திரி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற பொறுப்பாளர் சாந்து முகமது, கவுண்டம்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் லோகேஷ், குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர் ஆண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் .குமார், இணை செயலாளர் S.P.சிவசங்கர், பல்லடம் பொறுப்பாளர் .மணிதாஸ், அவிநாசி பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்
கோவை மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் ஆர்ப்பாட்டமாக வெற்றியடைய செய்ய அனைவரையும் ஒருங்கிணைத்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்