கோவை ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில் ஈஸ்டர் சிறப்பு மதிய விருந்து

கோவை ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில்  ஈஸ்டர் சிறப்பு மதிய விருந்து!
கோயம்புத்தூர் 25, மார்ச் 2024:
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியான ஓ பை தமாராவின் உணவகமான ஓ கஃபே-வில் வரும் ஞாயிறு (மார்ச் 31) மதியம் 12.30 முதல் 3 மணிவரை ஈஸ்டர்  சிறப்பு மதிய விருந்து நடைபெறவுள்ளது.
உள்ளூர் வகை உணவான அப்பம் முதல் உலகின் பல பகுதிகளில் மக்கள் விரும்பும் உணவு வகைகள் பலவும், வெவ்வேறு வகை சாலட்,  இனிப்புகள் இந்த விருந்தில் இடம்பெறும். மேலும் வாடிக்கையாளர்கள் முன்னர் நேரடியாகவே பல உணவுகள் சமைத்து தரும் கவுன்டர்களும்  இதில் இடம்பெறும்.
குழந்தைகள் ஈஸ்டர் காலத்தில் விளையாடும் 'புதையல் தேடும் போட்டி' விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் பங்கேற்க பெரியவர்களுக்கு தலா ரூ. 1599++ மற்றும் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ. 899++ கட்டணமாகும். இந்த கட்டணத்திற்கு விருந்துடன் தேநீர் மற்றும் காபி உள்ளடங்கும். விருந்தில் உள்ளடங்கும் வேறு எந்த  உணவை ஆர்டர் செய்தாலும் அதற்கு கட்டணம் உண்டு.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்