மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கோவையில் மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..


கோவையில் அனைத்து மத நண்பர்கள் இணைந்து  மனிதநேய நண்பர்கள் குழு எனும் அமைப்பை நடத்தி வருகின்றனர்..இந்த நண்பர்கள் குழு சார்பாக சமுதாயம் சார்ந்த பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.. இந்நிலையில் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக  மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சமுதாய நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது.அமைப்பின் தலைவர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிக்கந்தர் பாஷா,ஆர்.எம்.ஓட்டல் மொய்தீன்,அன்வர்,யாசுதீன்,சாகுல்,ரபீக்,லயன் செரீப்,ரின்லி,சிக்கந்தர்,கோட்டை இஸ்மாயில்,அப்பா என்கிற அப்துல் ரகுமான், முகமது முத்து,சுலைமாப்,ஜான்சன்,விஷ்ணு,கனி,சம்சு,சதாம்,சண்முகம்,ஆசிம்,மற்றும் நண்பர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர்..நிகழ்ச்சியில்,பல.சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, கோட்டை இதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் இனாயத்துல்லா,யு.கே.உமர்,சிங்கை மதன்,சாதிக்,கோட்டை செல்லப்பா,கோவை பைசல்,உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்..விழாவில் கலந்து கொண்டோர் பேசுகையில்,இது போன்ற மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்ச்சிகள் அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமையை காட்டுவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும்  பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது..இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்