ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறப்பு தொழுகை



ஈகை திருநாளான புனித ரமலான் பண்டிகை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சிறப்பு தொழுகை மதுரை அரசரடி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹீம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் அர்சத் புகாரி, தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட கட்சி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டு ஒருவரையொருவர் கட்டி தழுவி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!