சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு

*சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு!* 

 மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதா அவர்களுக்கு கைச்சின்னத்தில் வாக்குகள் கோரி சீர்காழி நகரத்தில் 15 ஆவது வார்டு பகுதிகளில் உள்ள கீழத்தெரு, அய்யனார்கோவில் தெரு மற்றும் பல்வேறு தெருக்களில் நகரக் கழக செயலாளர் சுப்புராயன் தலைமையில் வார்டு கழக செயலாளர் பந்தல்முத்து, பிரதிநிதி கண்ணன், குமார், திருச்செல்வம், நகர்மன்ற உறுப்பினர் வள்ளிமுத்து ஆகியோர் முன்னிலையில் விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளரும் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரருமான ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் குத்தாலம் இரா. மனோகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வ முத்துக்குமார், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, சீர்காழி நகர திமுக பொருளாளர் கோடங்குடி சி. சங்கர் உள்ளிட்டோர் மற்றும் கழக முன்னணியினர் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் மகளிர் அணியைச் சார்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்று வீடு வீடாக தமிழ்நாடு முதலமைச்சரின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்