பிளஸ்-2 தேர்வு முடிவுகள்...திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருப்பூரில் பாரம்பரியமிக்க பள்ளியான நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94.4 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவன் ஹபிபுர் ரகுமான் 600க்கு 571 மார்க் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ராகுல் 558 மார்க் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். 557 மார்க் பெற்ற தர்ஷன் மூன்றாம் இடத்தையும், 555 மார்க் பெற்ற தினேஷ் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.  மேலும் 14 பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில்நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர்  நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேர், பொருளியல்  பாடத்தில் 3 பேர், கணினி அறிவியல் பாடத்தில் ஒருவர்,  வணிகவியல்  பாடத்தில் ஒருவர் 100க்கு 99 மார்க் பெற்றுள்ளனர்.  வணிகவியல் பாடத்தில் 19 பேர் கணக்குப்பதிவியலில் 18 பேர், ம் தமிழில் 15 பேர்,  கணினி பயன்பாடுகள் பாடத்தில் 15 பேர், கணினி அறிவியல்பாடத்தில் 8 பேர் பொருளியல் பாடத்தில் 6 பேர், நெசவுத் தொழில்நுட்பம் பாடத்தில் 2 பேர், ஆங்கிலம் ,கணிதம்,வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என 100க்கு 90க்கும் மேல் மார்க் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை தலைமை ஆசிரியர் பழனிசாமி பாராட்டினார். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்