மயிலாடுதுறையில் மே தின விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்று கொடியேற்றினார்

*மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொது தொழிலாளர் சங்க மே தின விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்று கொடியேற்றினார்!*                  மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் 39வது ஆண்டு மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வரவேற்புரையாற்றினார். விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா.எம். முருகன் பங்கேற்று மே தின கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியசீலன், தலைமை செயற்குழு உறுப்பினர் பெருமங்கலம் இராம.இளங்கோவன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஞான.இமய நாதன்,முருக மணி, மூவலூர் மூர்த்தி, நகர் மன்ற தலைவர் குண்டாமணி என்கின்ற என். செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திருமணஞ்சேரி இரா. மனோகரன், சுரேஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் நத்தம் வின்சென்ட் சிவதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயலாளர் தங்க. அய்யாசாமி, நகர செயலாளர் ராஜ்குமார் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி  கமலநாதன், ராஜசேகர் அனைத்து  கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அருந்ததியர்கள் கட்டிட தொழிலாளர்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள் பங்கேற்றார்கள். நாட்டுப்புறக் கலைஞர்  கிங்பைசல், பால ரவிச்சந்திரன் தலைமையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விமல் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி