ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதி ஊராட்சிகளில், நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்..


 அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்களும்நடைபெறும்.அதேபோல், கலைஞரின் கனவு இல்ல திட்டம் 2024-25 மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த குடியிருப்புகள் பராமரிப்பு செய்தல் 2024 - 25 திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, கிராம சபையில் பொதுமக்களின் பார்வையில் வைத்து, ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்