வேகத்தடைக்கு வெள்ளையடிக்கும் பணிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி

*வேகத்தடைக்கு வெள்ளையடிக்கும் பணிக்கு நன்றி!*   *அ.அப்பர்சுந்தரம்*         
  நமது கோரிக்கையை ஏற்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  சாலையில் உள்ள வேகத்தடை வெண்மை நிறம் அடிக்கும் பணி தற்பொழுது  நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்பீட் பிரேக்கர் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். உடனடியாக அங்கு இருந்த குளிச்சார் ஊராட்சி பகுதியைச் சார்ந்தவர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஸ்பீடு பிரேக்கருக்கு வெள்ளை நிறம் அடிக்க வேண்டும் என்றும் என்னிடம் தொலைபேசியில்கோரிக்கை வைத்தார். அதனை நெடுஞ்சாலைத் துறையினரிடம் தெரிவித்திருந்தோம். அதனை அடுத்து கோரிக்கை வைத்த உடனேயே வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இனியாவது பொதுமக்கள் வேகத்தடைகளை பார்த்து பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்