மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது

*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஜிஎச் சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் JCP எந்திரம் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பேருதவியுடன் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது!* *மக்கள் பெரும் மகிழ்ச்சி!* 

 மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அச்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன என்பதாலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாலும் மயிலாடுதுறை தொகுதியின் வடக்கு பகுதியை முழுமையாக இணைக்க கூடிய இச்சாலை பள்ளங்கள் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். இச்சாலையின் அவசியம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் பல மாதங்களாக இப்பள்ளங்கள் மூடப்படாததால் கேட்பாரற்ற நிலையிலும் உள்ளதால் மக்களின் நலன் கருதி உடனடியாக இச்சாலையை மேம்படுத்திடவும் பள்ளங்களை உடனடியாக மூடிடவும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சி மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இரவு கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது. இச்சாலை பார்த்து அறிந்து அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளிகளின் உறவினர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் சமூக ஆர்வலர் மற்றும் நண்பர்களை வெகுவாக பாராட்டினார்கள். .

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்