தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், முன்னிலையில் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,வார்டு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், வாக்கு சாவடி முகவர்கள், பாக முகவர்கள், கழகத் தோழர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், என அனைவரும் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்