கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்* 

கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை முதன்மைச் சாலை, ஜெகதேவி தண்ணீர் பள்ளம், துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
அதில் பள்ளி ஆசிரியர் சுவேதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் தலைமை உரையாக பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். 
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்ற எம்.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி நிறுவனர் து.மணி கலந்து கொண்டு மாணவர்களுக்கிடயே காமராசர் வாழ்க்கை வரலாறு மற்றும் கல்வி வளர்ச்சியை பற்றியும் மாணவி, மாணவர்களுக்கு விளக்கமாக உரையாற்றினார்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர் எம்.பன்னீர்செல்வம் அவர்களால் வழங்கப்பட்டது. 
பள்ளி நிர்வாக இயக்குனர் சிந்து வாழ்த்துரை வழங்கினார் .
 பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசிரியர் அகிலா செயல்பட்டார். 
விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியை ஆசிரியர்கள் செய்தனர் விழா முடிவு ஆசிரியர் காயத்ரி நன்றியுரை கூறினார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்