சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிசத் ஒன்றிய செயற்குழு

சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து  பரிசத் ஒன்றிய செயற்குழு கூட்டம் 24-7-2024 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெருமாள் கோவில் திடலில் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்புரை  மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் கலந்துகொண்டார் செயற்குழுவில் நாகராஜ் மாவட்ட இணை செயலாளர், கிருஷ்ணமாச்சாரி மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்,  காளிமுத்து நகர இணைச் செயலாளர்,  பிரகாஷ் ஒன்றிய இணைச் செயலாளர், முருகன்  பூசாரி பேரவை பொறுப்பாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1)செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நிறைவு விழாவான விஜர்ஜன விழாவிற்கு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால்ஜியை அழைப்பது 2)சூலூரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒண்டிப்புதூரிலிருந்து சூலூர் ஏரோ வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் 3)கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உண்டான நிதியை இந்த பாராளுமன்ற கூட்ட தொடரிலேயே ஒதுக்க வேண்டும்  4)தமிழகத்தில் உள்ள இந்து கோவிலுக்கு தமிழக அரசு அதிகமாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்  5)மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதை விழிப்புணர்வு  பிரச்சாரத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட பல கோரிக்கைகள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்