ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கார் விபத்தில், ஈரோட்டை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு . இரண்டு பேர் படுகாயம் .

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், நேற்றிரவு சுமார் 8.45 மணி அளவில், சத்தியமங்கலத்தில் இருந்து ஹசனூர் சென்ற, கல்லூரி மாணவர்கள் சென்ற சொகுசு காரும், தக்காளி பாரம் ஏற்றி வந்த மினி வேனும் நேருக்கு நேராக மோதி, விபத்திற்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். 

சத்தியமங்கலத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து முடித்த, ஈரோட்டைச்சேர்ந்த முகில் நிவாஸ், அவரது தம்பி ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது நண்பர் கள் ஆதி சீனிவாசன், தர்மேஷ், ரோஹித் ஆகிய ஐந்து மாணவர்கள் ஆசனூர் செல்வதற்காக, சத்திய மங்கலத்தில் இருந்து, நேற்று இரவு சென்றனர். காரை முகில் நிவாஸ் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது, சத்தியமங்கலம் வடவள்ளி கிராமம் அருகே, கல்லூரி மாணவர் கள் சென்ற கார்,  அதி வேகமாக சென்று, தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி, அந்தியூர் செல்ல வந்த மினி சரக்கு வேன் மீது மோதியதில்,விபத்து ஏற்ப்பட்டது. இதில்,காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி, கல்லூரி மாணவர் கள் முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய மூன்று மாணவர்கள், தலையில் பலத்த அடிபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஸ்ரீநிவாஸ், ஆதி சீனிவாசன் ஆகிய இருவரையும், சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து,முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர்,மேல் சிகிச்சை க்காக,ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டனர். அதிவேகமாக சென்ற கார் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில், கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்திருப்பது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இறந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, சத்திய மங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து, சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்